krishnasai
Jai Sairam ...  Log in   |   Register Language: தமிழ்  /  English
நெய்வேலி கிருஷ்ணசாயி துவாரகமாயி ஸ்தல வரலாறு

ஒம் சாய்ராம்.... உலகெல்லாம் புகழ் பெற்றுவரும் பல லட்சம் மக்களை கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சீரடி சாய்பாபா கோவில் ஒன்று வேண்டும் என்பது பலநாள் பிரார்த்தனை ,கனவும் கூட அந்த பிரார்த்தனையும் கனவும் இவ்வளவு சீக்கிரம் பழமாகும் என்று நினைக்கவில்லை, ஆனால் சாய்ராம் நினைத்துவிட்டார். அதுதான் இன்று நெய்வேலி கிருஷ்ணசாயி துவாரகமாயி. D-11,Perumalkoilstreet , Block-27 Neyveli



மயிலாப்பூர் ராதா மாமி வருகையும் பஜனையும் : மயிலாப்பூர் திருமதி.ராதா மாமி வந்தார் பஜனையடன் 30.03.2012 முதன் முதலில் ஷிரிடி சாய் பாபாவிற்கென்று ஒரு மாபெரும் பஜனை ஏற்பாடு செய்தோம். சென்னை மயிலாப்பூர் ஷிரடி சாய்பாபா கோவிலை கட்டிய ஸ்ரீ நரசிம்ம்ம ஸ்வமிகளின் சம காலத்தவரான நூற்றண்டு விழா நாயகி திருமதி ராதா மாமி குழுவினரின் பஜன் நெய்வேலி தெலுங்கு சமிதியில் திருமதி சொர்ணகுமாரி சுரேந்தர் மோகன் தலைமையில் நடந்தது.


கிட்டதட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக சீரடி சாய் பாபா பஜனுக்கு வந்தார்கள்.பூஜையும், பஜனையும்,அன்னதானமும்,நடனமும் கண்கொள்ளாக் காட்சி. இதுபோல் இதுவரை என்றும் காணாத அளவு மக்கள் கூட்டம் கரைபுரண்டது. (ஒரு வருடத்தில் பாபா நெய்வேலியில் வந்து உட்காருவார் என்ற ராதா மாமியின் வாக்கு பலித்தது).தொடர்ந்து ஒவ்வொரு வியாழனும் விடாமல் பஜன் நடந்து கொண்டிருந்தது.பாபாவுக்கென்று ஒரு இடமும் கிடைத்தது.



பூட்டிய வீட்டிற்குள் பாம்பாக வந்தார் பாபா 30.11.2012 ராதா மாமியின்வாக்குப்படி விரைவில் பாபாவுக்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒரு இடம் கொடுத்தார்கள் .பலநாள் கனவு நனவாகியது. வீட்டை வாங்கி கதவைத்திறந்தால் பெரிய நல்லபாம்பு பூட்டிய வீட்டிற்குள் படுத்திருந்தது. பாபா பாம்பு உருவில்வந்து நான் இருக்கிறேன், இனி கவலைப்படாதீர்கள் என்று சொல்லி ஆசி வழங்கியதுபோல் இருந்தது.



குழந்தை பாபாவுக்கென்று ஒரு இடம் 13.12.2012 சிறியதாக ஒரு இடத்தை அவசரமாக உருவாக்கி அதில் சிறிய பாபாவை பிரதிஷ்டை செய்ய, ஒரு கோ பூஜையோடு கூடிய பூமிபூஜையம் செய்து மேளதாள்த்துடன் இடத்தை தயார் செய்து கொண்டார் பாபா.நெய்வேலி அதிபர் தலைமையில் நடந்தது இந்தவிழா. சாயிக்கென்று ஒரு வீடு அதில் முதல் பஜன் 13.12.2012 முதன்முதல் காடாக கிடந்த இடத்தில் அவசரமாக வியாழக்கிழமை மாலை முதல் பஜன் வெற்றிகரமாக ஆரம்பித்தோம். காடோ, செடியோ,கொடியோ எதுவும் பார்க்காமல் பாபா மட்டும்தான் எங்கள் கண்ணுக்கு தெரிந்தார் . அன்றுமுதல்இன்று வரை விடாமல் பஜனையை நடத்திக் கொண்டிருக்கிரார் பாபா.

குழந்தை பாபா பிரதிஷ்டை 14.12.2012 அன்றே மாலை குழந்தை பாபாவை முறைப்படி, நவரத்ணம்,சாயிநாமம், நவதானியம் வைத்து பிரதிழ்டை செய்தோம்.சிலையை தூக்கியவுடன் அந்த இடமே பயங்கரமாக சுற்றியது. மறுபடியும் பாபாவை கீழே வைத்ததும் பழைய நிலைக்கு வந்தது. அங்கே பாபாவே வந்து விட்டதற்கான அறிகுறியாக இருந்தது. அன்றைக்கு வந்த தெய்வீக அதிர்வு இன்று வரை தொடர்கிறது.